மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் – விசாரணைகள் ஆரம்பம்!

கொரோனா தொற்று பரவியதை அடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கப்பட்டதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கணக்காய்வாளர் நாயகம் W.B.C. விக்ரமரத்ன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 3 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், கிடைத்துள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஊடகங்கள் ஊடாக வெளியான பிரச்சினைகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் தீர்வு காணப்பட்டடுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், கொடுப்பனவு விடயத்தில் ஏதேனும் முறைப்பாடுகள் காணப்படுமாயின், www.auditorgeneral.gov.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து முறைப்பாடுகளை பதிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முறைப்பாடுகள் தொடர்பிலான விசாரணைகள் பிரதி கணக்காய்வாளர் நாயகத்தின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.