போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
போதை வில்லைகளுடன் சந்தேகநபர் ஒருவர் களனி புலுகங்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபரிடமிருந்து ஆறு கோடி ரூபா பெறுமதியான ஆயிரத்து 900 போதை வில்லைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
களனி பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து 3 கிராம் 360 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளூடாக பியகம பகுதியிலும் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, 3 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயினுடன் சொகுசு கார் ஒன்றுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை