ஆறுமுகன் தொண்டமானுக்கு வவுனியாவில் அஞ்சலி
காலஞ்சென்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானுக்கு இன்று (வியாழக்கிழமை) வவுனியாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
சிதம்பரபுரம் மக்களின் ஏற்பாட்டில் சிவகாந்தன் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், அன்னாரது ஒளிப்படத்திற்கு நினைவு சுடர் ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேசசபை உறுப்பினர் சுரேஸ், பழனி முருகன் ஆலயத் தலைவர் மாதவன், கிராம அபிவிருத்திச் சங்க தலைவர்களான மகேந்திரன், செல்வம், பெண்கள் அபிவிருத்திச் சங்கத்தின் தலைவி மல்லிகா ஆகியோர் கலந்துகொண்டனர்.
அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் உடல்நலக் குறைவால் நேற்று முன்தினம் இரவு காலமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை