கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரிப்பு!
இலங்கையில் மேலும் 06 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1530 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 745 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் 775 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை