வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைப்பு!
வெலிசர கடற்படை முகாமில் உள்ள அனைவரும் தனிமைப்படுதல் நிலையங்களிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமிலிருந்த அனைத்து கடற்படையினரும் நாட்டின் பல பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று அவர்களது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
வெலிசர முகாமில் சுமார் 4 ஆயிரம் கடற்படையினர் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை கொழும்பின் கபூர் கட்டிடத்தில் தங்கியிருந்த 200 கடற்படை உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் இசுரு சூரியபண்டார குறிப்பிட்டுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை