இலங்கையில் இவ்வருடம் இதுவரை டெங்கு நோயால் 20 பேர் சாவு கொரோனாவால் 10 பேர் சாவு
இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 20 டெங்கு நோயாளர்களும், கடந்த வருடத்தில் 150 டெங்கு நோயாளர்களும் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
அதேவேளை, இவ்வருடம் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா நோயினால் இதுவரை 10 பேரே உயிரிழந்துள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்கள் பாதுகாக்கப்படுவது போன்று, டெங்கு நோயிலிருந்தும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு உரியது என்றும், அதனாலேயே ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய, ‘டெங்கு ஒழிப்பு செயற்பாட்டு செயலணி’ அமைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உங்களது சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருத்தல், உங்களைச் சுற்றியுள்ள கட்டடங்களைச் சுத்தமாக வைத்திருத்தல் உங்களுடைய பொறுப்பாக எண்ணி செயற்படுமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்” – என்றார்.
கருத்துக்களேதுமில்லை