கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு!
கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை(சனிக்கிழமை) காலை 9 மணி முதல் நாளைமறுதினம் அதிகாலை 3 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
கொழும்பு, 2, 3, 7, 8, 9, மற்றும் 10 ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அத்துடன், கொழும்பு 1 இல் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து மாளிகாகந்த வரையிலான நீர் விநியோக கட்டடைப்பில் மேற்கொள்ளப்படவுள்ளதாக திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கருத்துக்களேதுமில்லை