இலஞ்சம் பெற்ற பிரதேச செயலாளர்- உதவித் திட்டமிடல் பணிப்பாளருக்கு விளக்கமறியல்
இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில், சந்தேகத்தில் கைதான ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோரை எதிர்வரும் ஜூன் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.ஹம்ஸா உத்தரவிட்டுள்ளார்.
சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார் 3 இலட்சம் ரூபாய் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர். நேற்று (வியாழக்கிழமை) நண்பகல் 12.30 மணியளவில் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நேற்று மாலை, நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றப்போதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார்.
இவ்விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு நீதவான் நீதிமன்றில் விசாரிப்பதற்குரிய ஒப்புதல் அடிப்படையில் வழக்கு கொழும்புக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை