சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக மத்திய செயற்குழு கூடி ஆராயும் – சம்பந்தன்
சுமந்திரனின் நேர்காணல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று(வியாழக்கிழமை) மாலை கொழும்பில் நடைபெற்றது.
இதன்போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் எல்லாவற்றுக்கும் நாம் பதிலளித்துக்கொண்டிருக்க முடியாது. கூட்டமைப்புக்குள் ஒற்றுமை மிக அவசியம். சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுமந்திரனின் சிங்கள நேர்காணல் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஆராயும் என சம்பந்தன் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், “எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் எமக்கு மிக முக்கியமானது. இந்தநிலையில், தேர்தல் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் எதிர்பார்த்திருக்கின்றேன்.
இன்று பெரும்பாலும் தீர்ப்பு வரக்கூடும். எனினும், தேர்தலை நாம் எந்தவேளையிலும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். இம்முறை காத்திரமான தேர்தல் அறிக்கையை நாம் தயாரிக்க வேண்டும்“ எனத் தெரிவித்துள்ளார்.
கருத்துக்களேதுமில்லை