மாவைக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தமிழரசு கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவுக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கு, தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தினை, மக்களை கூட்டி யாழ்ப்பாணம் மார்டீன் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைமையகத்தில் தலைவர் மாவை சோ.சேனாதிராசா தலைமையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக தமக்கு புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் அதற்கு தடை விதிக்குமாறு கோரி யாழ்ப்பாண பொலிஸார் யாழ்.நீதவான் நீதிமன்றில் கடந்த 17ஆம் திகதி வழக்கு தாக்கல் செய்து தடையுத்தரவை பெற்று இருந்தனர்.
குறித்த வழக்கு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டப்போது, வழக்கினை தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான ஏதுவான காரணிகள் இல்லை என தெரிவித்த நீதவான், வழக்கினை தள்ளுபடி செய்தார்.
கருத்துக்களேதுமில்லை