உண்மை, நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்வு கிடைப்பதை கோட்டா தடுக்கமுடியாது! இடித்துரைக்கின்றார் இரா.சம்பந்தன்
தமிழ் மக்களுக்குத் தீர்வு கிடைப்பதை ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவால் தடுக்க முடியாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சூரியன் எவ்.எம். வானொலியில் இன்று காலை ஒலிபரப்பான ‘விழுதுகள்’ நிகழ்ச்சியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு –
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டி நாங்கள் வெகுதூரம் பயணித்துள்ளோம். ஆட்சி அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டு அவை மாகாணங்கள் அல்லது பிராந்தியங்களுக்கு ஒப்படைக்கப்பட வேண்டும். அதியுச்ச அதிகார அடிப்படையில் – மக்களுடைய இறைமையின் அடிப்படையில் – அந்த அதிகாரங்களைப் பயன்படுத்தி கணிசமான சுயாட்சியை வடக்கு – கிழக்கில் நாங்கள் பெறவேண்டும். இதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
இன்றைக்கு சர்வதேச சமூகம் எங்களுடைய நிலைமைகளை நன்றாக உணர்ந் திருக்கின்றது; தெளிவாகப் புரிந்திருக்கின்றது. எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. விசேடமாக இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற நாடுகள் இலங்கை தொடர்பான கருமத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த நாடுகளுக்கு இலங்கை அரசால் பல்வேறு வாக்குறுதிகள் கொடுக்கப்பட் டுள்ளன. அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும்.
எங்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை, எமது மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கின்றது. அவர்களும் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள். அவர்களுக்கு நாங்கள் துரோகம் செய்ய மாட்டோம். அது அவர்களுக்குத் தெரியும். நாங்கள் நிதானமாக – அமைதியாக – பக்குவமாகச் செயற்படுவோம் என்று தமிழ் மக்களுக்கு நன்றாகத் தெரியும். நாங்கள் அரசியலுக்கு எங்களுக்காக வரவில்லை . தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்பதற்காகவே அரசியலுக்கு வந்தோம்.
எமது மக்கள் நீண்டகாலமாக எமது கொள்கைகளில் நம்பிக்கை வைத்து – எங்களை ஆதரித்து எங்களைப் பெரும் அளவில் நாடாளுமன்றத்துக்கு அனுப்பி தங்களுடைய ஏகப்பிரதிநிதிகளாக எம்மைத் தெரிவுசெய்திருக்கின்றார்கள். அதுதான் எமது முதல் பலம் – முதல் தைரியம். அந்தப் பலத்தில்தான் மற்றவையெல்லாம் தங்கியிருக்கின்றன. மக்களை நாம் நம்புகின்றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாது என்று நம்புகின் றோம். சர்வதேசம் எங்களைக் கைவிடாமல் செயற்படுவதற்குத் தேவையான அழுத்தங்களைக் கொடுக்கின்றோம்; கொடுத்துக்கொண்டு இருக்கின்றோம். தொடர்ந்தும் கொடுப்போம். கூடியளவு விரைவில் கொடுப்போம்.
கோட்டாவை நாம்
ஏற்கவில்லை
ராஜபக்ஷக்களைப்பொறுத்தவரையில் விசேடமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜ பக்ஷவைப் பொறுத்தவரையில் பெரும்பானமை இன மக்களின் வாக்குகளுடன் மாத்திரம்தான் அவர் பதவிக்கு வந்தார்..
சிறுபான்மை இன மக்கள் மத்தியில் அவர் பிரசாரம்கூடச் செய்யவில்லை . ஜனாதிபதியாக வருவதற்கு சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை அவர் கேட்க வில்லை ; பெறவில்லை. அவரை நம்பி நாங்கள் நிற்கவில்லை. அவர் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவரை உண்மையை ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும்.
உண்மையின் அடிப்படையில் – நீதியின் அடிப்படையில் – நியாயத்தின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படை யில் தமிழருக்கு ஒரு தீர்வு கிடைப்பதை அவரால் தடுக்க முடியாது. எவராலும் தடுக்க முடியாது. அது எங்களுடைய அடிப்படை உரிமை. தமிழ் பேசும் மக்கள் – விசேடமாக வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அது எங்களுடைய அடிப்படை உரிமை. அந்த உரிமையை எவரும் மறுக்க முடியாது. அதை நாங்கள் பெறுவோம்.
போர்க்குற்றச்சாட்டுக்கள் இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பில் சில சர்வதேச ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை மீது பிரேரணைகளும் கொண்டுவரப்பட் டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இந்தப்பிரேரணைகளைக் கொண்டு வந்த நாடுகளுடன் சேர்ந்து அந்தச் சபையின் உறுப்புரிமையிலுள்ள ஏனைய நாடுகளும், இலங்கையும் ஒத்துழைத்து சிலதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அந்தத் தீர்மானங்கள் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என் பதே எமது உறுதியான நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டிலிருந்து நாம் ஒரு போதும் விலகமாட்டோம். அடுத்த வரு டம்பங்குனி மாதம் அந்த விடயம் தொடர் பில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும். அந்த விடயம் தொடர்பில் தற்போது பல கருமங்கள் நடைபெறுகின்றன. அதைப் பற்றி தற்போது நான் பகிரங்கமாக பேச வேண்டிய அவசியம் இல்லை.
குழம்பமாட்டோம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரா கிய நாம் ஒற்றுமையாகச் செயற்படுகின் றோம். ஒருமித்துச் செயற்படுகின்றோம். கருத்து வேறுபாடுகள் இருந்தால் நாங் கள் பேசித் தீர்த்துக்கொள்கின்றோம். எங்களைக் குழப்புவதற்குப் பலர் முயற் சிப்பார்கள். பலர் முயற்சிக்கின்றார்கள். ஊடகங்களும் முயற்சிக்கின்றன. ஆனால், நாங்கள் குழம்பமாட்டோம். நாங்கள் மிகவும் அமைதியாக – பக்குவமாக இருந்து எமது கருமங்களை உறுதியாக முன்னெடுப்போம். அது உறுதி.
அரசியல் கைதிகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகள் நடைபெறு கின்றன. ஏற்கனவே பல கைதிகள் விடு விக்கப்பட்டுள்ளார்கள். மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் – என்றார்.
கருத்துக்களேதுமில்லை