மட்டக்களப்பில் ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் நினைவு தினம் அனுஷ்டிப்பு
மட்டக்களப்பில் கடந்த 2004ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் 16ஆவது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பில் கல்லடி வொய்ஸ் ஒஃப் மீடியா ஊடக கற்கைகள் நிறுவகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் தேவ அதிரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஊடகவியாலாளர்கள் கலந்துகொண்டு படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசனின் திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
அதற்கமைய முத்த ஊடகவியலாளர் சிவம் பாக்கிய நாதன் முதல்சுடர் ஏற்றியதையடுத்து, ஏனைய ஊடகவியலாளர்கள் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தி, அன்னாரது ஆத்மா சாந்திக்காக 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
குறித்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, சுகாதார முறைகளுக்கு ஏற்றாற்போல் நடத்தப்பட்டதுடன், ஊடகவியலாளர் சங்கத்தின் சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை