இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும்!

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார தாக்கத்தை தணிக்கும் முயற்சியில், இலங்கை இந்தியாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் ஈடுபட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்திற்கான தடைகளை குறைக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, 2020 ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி 82 சதவீதம் குறைந்துள்ளது, ஆடை ஏற்றுமதி 81.78 சதவீதமாக குறைந்துள்ளது.

அமைதிக்கு பெயர் பெற்ற தெற்காசிய தீவின் முக்கிய வருவாய் ஈட்டும் துறைகளில் ஒன்றான சுற்றுலாத் துறையை நோக்கியே கவனம் செலுத்த வேண்டும் என்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, விமான நிலையங்களையும் துறைமுகங்களையும் மூடிய பின்னர், மார்ச் 18 முதல் இலங்கை எந்தவொரு சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்குவரவில்லை என்றும் இருப்பினும், ஓகஸ்ட் மாதத்திற்குள் விமான நிலையங்களை மீண்டும் திறக்க அதிகாரிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

கடந்த வருடம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல்களால் நாடு பாரிய பின்னடைவை எதிர்கொண்ட போதிலும் கடந்த ஆண்டு சுற்றுலாத்துறையிலிருந்து குறைந்தது நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் கிடைக்கப்பெற்றது என்றும் அவர் கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.