ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம் மோதலில் முடிந்தது!
நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நிதிக் கோரும் போராட்டம், கனடாவிலும் இடம்பெற்றுள்ளது.
மொன்றியலில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற இப்போராட்டம், மோதலுடன் முடிவுக்கு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொன்றியல் நகரத்தின் வழியாக பதுங்கியிருந்த போராட்டக்காரர்கள் இரவு வேளையிலும் அதே இடத்தில் இருந்ததாலேயே போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் மோதல் வெடித்தது.
மொன்றியல் பொலிஸார் கூட்டத்தை சட்டவிரோதமாக அறிவித்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, அவர்கள் அங்கு இருந்தால் மிளகு தெளிப்பு மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அகற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் 46 வயதான ஜோர்ஜ் ஃபிலாய்ட் என்பவர், கடந்த திங்கட்கிழமை நான்கு மினியாபோலிஸ் பொலிஸ் அதிகாரிகளின் தாக்குதலால் கொல்லப்பட்டார்.
இந்தநிலையில், இதற்கு நீதிக் கோரியும், பொலிஸ் அதிகாரிகள் தண்டிக்கபட வேண்டுமெனவும் நியூஸிலாந்து, பிரித்தானியா மற்றும் அமெரிக்காவில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
கருத்துக்களேதுமில்லை