முரசுமோட்டை மக்கள் ஒன்றியத்தால் சாதனை மாணவனுக்கு உதவி

கிளிநொச்சியில் கழிவுப்பொருட்களை கொண்டு கார் ஒன்றினை தயாரித்த மாணவனுக்கு முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பினால் உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது.

கடந்த வாரம் கிளிநொச்சி பரந்தனை சேர்ந்த ரொசான் என்ற மாணவன் நால்வர் பயணிக்க கூடிய கார் ஒன்றினை அண்மையில் தயாரித்திருந்தார்.

குடும்ப வறுமையிலும் தனது அயராத முயற்சியினால் தனக்கு கிடைத்த வளத்தினை பயன்படுத்தி இந்த மாணவன் தயாரித்த காரினை அனைவரும் பாராட்டி வரும் நிலையில் முரசுமோட்டை மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பு குறித்த மாணவனுக்கு 75000 ரூபாவினை உதவித்தொகையாக வழங்கியுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.