பிரேஸிலில் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்தது!
பிரேஸிலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது.
இதற்கமைய பிரேஸிலில் தற்போதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தமாக 30,046பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 529,405பேர் பாதிக்கப்பட்டுள்ளளனர்.
இதன்மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பை சந்தித்த நான்காவது நாடாக பிரேஸில் மாறியுள்ளது.
இந்த பட்டியலில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரித்தானியா இரண்டாவது இடத்திலும், இத்தாலி மூன்றாவது இடத்திலும் உள்ளன.
பிரேஸிலில், கடந்த 24 மணித்தியாலத்தில் 14,556பேர் வைரஸ் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளதோடு, 732பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுக்கு 288,279பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 211,080பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர 8,318பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை