யாழ்.பிரபல பாடசாலை ஒன்றிலிருந்து சடலம் கண்டெடுப்பு
யாழ். புலோலி அ.மி.த.க.பாடசாலையில் இருந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் காவலாளியாக கடமையாற்றி வந்தவரே, இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, வழமை போன்று நேற்று இரவு, கடமைக்கு வந்த நிலையிலையே இன்றைய தினம் காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்திலையில் சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை