மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்ட நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,645 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இருவரும் கடற்படையினர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
மேலும் இன்றுமட்டும் மேலும் 12 பேர் பூரண சுகம் பெற்றுள்ளதை அடுத்து கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 823 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை