கறுஞ்சிறுத்தை தொடர்பில் மரபணு பரிசோதனை

அண்மையில் பொறியொன்றில் சிக்கி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த கறுஞ்சிறுத்தை தொடர்பான மரபணு பரிசோதனை, பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய உயிரியல் தொழில்நுட்ப நிலையத்தில் நடத்தப்படவுள்ளதாக அதன் பணிப்பாளர் கலாநிதி பிரதீபா பண்டார தெரிவித்துள்ளார்.

வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மரபணு பரிசோதனையை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் உயிரிழந்த கறுஞ்சிறுத்தையின் இரத்த மாதிரியும் தற்போது உயிர்வாழும் ஒருவகை சிறுத்தையின் இரத்த மாதிரியும் பெறப்பட்டு, ஒப்பீட்டு முறையிலான டி.என்.ஏ.சோதனைகள் நடத்தப்படவுள்ளதாக பிரதீபா பண்டார சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் குறித்த பரிசோதனையின் ஊடாக இந்தக் கறுஞ்சிறுத்தை பிரத்தியேகமான வகையைச் சேர்ந்த உயிரினமா அல்லது தற்போதுள்ள உயிரினத்தின் தோலில் ஏற்பட்ட நிறமூர்த்த குறைப்பாட்டால் கறுப்பாக இருக்கிறதா என்பது கண்டறியப்படும் என  அவர் கூறியுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.