பொது போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை
சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு பொதுப் போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவர போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதற்கமைய எதிர்வரும் 8ஆம் திகதி திங்கட்கிழமை முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
இது குறித்து இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றினை தொடர்ந்து இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய சுகாதார அறிவுறுத்தலுக்கமைய ரயில் மற்றும் பேருந்து உட்பட சகல பொது போக்குவரத்துக்களையும் வழமை போன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்று பரவல் காரணமாக பொது போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை