தம்புள்ளை விபத்தில் இரு இராணுவ வீரர்கள் உயிரிழப்பு
தம்புள்ளை- தமனயாய பகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், இராணுவ வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் லுணுகல மற்றும் கல்தொட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய இராணுவ வீரர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
குறித்த பகுதியில், மோட்டார் சைக்கிளொன்றும், தனியார் பேருந்தொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் பேருந்து சாரதியை கைது செய்து, மேலதிக விசாரணைகளை பகமூண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை