பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிப்பு!
பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒரு மணிநேரத்திற்கான குறைந்தபட்ச ஊதியம் 13.85 டொலரிலிருந்து 14.60 டொலராக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து, குறைந்தபட்ச ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு 15 டொலராக உயர்த்துவதாக மாகாணம் வாக்குறுதி அளித்தது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது.
ஆனால், ஊதிய உயர்வு கட்டம் கட்டமாக இருந்தாலும், சில வணிக நிறுவனங்கள் இது சரியான நேரம் இல்லையென கருதுகின்றது.
கருத்துக்களேதுமில்லை