ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலை நீடிப்பு?
ஒன்றாரியோ மாகாணத்தின் அவசரக்கால நிலையை மேலும் 28 நாட்களுக்கு நீடிக்க தீர்மானித்துள்ளதாக முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ‘தனது அரசாங்கம் பொருளாதாரத்தை மீண்டும் திறந்துவிடும் திட்டத்தில் தீவிரமாகச் செயற்படுகின்றோம். பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவிட்டால், நாம் மற்ற கட்டங்களைப் பார்ப்போம். நான் பொருளாதாரம் செல்ல விரும்புகிறேன். ஆனால் நாங்கள் அதை பாதுகாப்பாக செய்ய வேண்டும்’ என கூறினார்.
குயின்ஸ் பார்க்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், ஜூன் 2ஆம் திகதி காலாவதியாகும் நிலையில் இருந்த அவசரக்கால நிலை ஜூன் 30ஆம் திகதி வரை நீடிக்கப்படும்.
ஒன்றாரியோவில் கொவிட்-19 பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், மார்ச் 17ஆம் திகதி ஒன்றாரியோ மாகாணம் அவசரகால நிலையை அறிவித்தது.
கருத்துக்களேதுமில்லை