இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா – பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்தது
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அதன்படி தற்போதைய நிலைவரப்படி கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 207,191 ஆக அதிகரித்துள்ளது.
இதேநேரம் கொரொனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5829 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, இந்த தொற்றிலிருந்து இதுவரையில், 100,285 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட சர்வதேச நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடந்தும் 7 ஆவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் மகராஷ்டிரா மாநிலமே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உதியாகியுள்ள நிலையில், 2 ஆயிரத்து 362 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 1091 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய தொடர்ந்து 3வது நாளாக, தமிழகத்தில் ஒரே நாளில் தலா 1000த்தை விட அதிகமாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 24 ஆயிரத்து 586 என்ற அளவில் பதிவாகியுள்ளது.
மேலும் தமிழகத்தில் ஒரேநாளில் 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மொத்த எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளது. அதில், 150 நோயாளிகள் சென்னையை சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் கொரோனாவைக் கட்டுப்படத்த முடக்கம் மற்றும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழகத்தில் முடக்கத்தில் சில விதிமுறைகள் தளர்வுக்கு பிறகு, கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை