அல்பேர்ட்டாவில் மேலும் 13 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ்!
அல்பேர்ட்டாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 13 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் இறப்பு சம்பவிக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 7,057 பேரில் 377 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெறுவருகின்றனர். அவர்களில் 6 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
அல்பேர்ட்டாவில் இறப்புகளின் எண்ணிக்கை 143 ஆக உள்ளது அத்தோடு இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,057 ஆக பதிவாகியுள்ளன, மேலும் அதில் 6,537 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்நிலையில் இந்தவாரம் அல்பேர்ட்டாவின் அவசரகால அமைச்சரவைக் குழு, மாகாணத்தின் 2 ஆம் கட்டமாக மீண்டும் ஆரம்பிப்பது குறித்து முடிவொன்றினை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துக்களேதுமில்லை