நாடளாவிய ரீதியில் இன்றும் வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு!
நாடளாவிய ரீதியில் இன்றும் (வியாழக்கிழமை) நாளை வெள்ளிக்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அந்தவகையில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு எதிர்வரும் 6 ஆம் திகதி சனிக்கிழமை அதிகாலை 4.00 மணிக்கு தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு காலப்பகுதியில் மக்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரப் பிரிவு மக்களை அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், சகல அரச நிறுவனங்களுக்கும் இன்று விடுமுறை தினமாக பொதுநிர்வாக அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை நாடு முழுவதும் நாளையும் நாளை மறுதினமும் அனைத்து மதுபான சாலைகளும் மூடப்படும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை