கொரோனா வைரஸ் – குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பால் குணமடைவோர் விகிதம் 48.31 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதேசமயம் உயிரிழப்போர் விகிதம் 2.80 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாவது:
கடந்த 24 மணிநேரங்களில் மொத்தம் 4 ஆயிரத்து 776 நோயாளிகள் குணமடைந்துள்ள நிலையில் இதுவரை மொத்தம் ஒரு லட்சத்து 303 நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரஸ் உறுதியான நோயாளிகளில் குணம் அடைவோர் சதவிகிதம் 48.31சதவீதமாக உள்ளது என்றும் தற்போது 1 இலட்சத்து ஆயிரத்து 497 பேர் சிகிச்சையில் உள்ளனர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இந்தியாவில் நேற்றுமட்டும் 9 ஆயிரத்து 633 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்து 16 ஆயிரத்து 824 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு 259 பேர் உயிரிழந்துள்ள நிலையில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையும் 6 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று மட்டும் 1,286 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்து 872 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து 4வது நாளாக ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 610 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 14 ஆயிரத்து 316 உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 208 பேர் உயிரிழந்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை