இராணுவத்தின் பிடிக்குள் நாடு காய் நகர்த்துகின்றார் கோட்டா! கடும் சீற்றத்துடன் சுமந்திரன்

தேசிய ரீதியில் படைத்தரப்பை மட்டும் கொண்ட விசேட ஜனாதிபதி செயலணி ஒன்றையும், கிழக்கில் தொல்லியல் பாதுகாப்பு என்ற பெயரில் படைத் தரப்பினர், பிக்குமார் உள்ளிட்ட சிங்களவர்களை மட்டும் கொண்ட விசேட செயலணி ஒன்றையும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உருவாக்கியுள்ளர். இவைநாட்டை சிங்கள மயமாக்குதல், பௌத்த மயமாக்குதல், இராணுவப் பிடிக்குள் வைத்திருத்தல் என்ற நிகழ்ச்சி நிரல்களின் வெளிப்பாடே. – இவ்வாறு ஜனாதிபதியின் நடவடிக்கையை சீற்றத்துடன் கண்டித்திருக்கின்றது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன்.

இவ்விடயம் தொடர்பில் கூட்டமைப் பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்றிரவு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே மேற்படி கண்டனத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- |

புதிய ஜனாதிபதியாகக் கோட்டாபய ராஜபக்ஷபதவியேற்ற காலம் தொடக்கம் நாட்டில் இராணுவ மயப்படுத்தப்பட்ட ஆட்சி முறையை நிறுவும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அது உக்கிரமடைந்து வருகின்றது என்பதுதான் நிலைமை.

அதன் இன்னொரு வடிவம்தான் இப்போது ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டிக்கும் ‘பாதுகாப்பான நாடு, ஒழுங்கமான – நீதியான – சட்டத்தை மதிக்கும் சமூகம் என்பவற்றைக் கட் டியயெழுப்புவதற்கான ஜனாதிபதி செயலணி’ என்பதாகும்.

சட்டம் – ஒழுங்கைப் பேணுவது, போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவது போன்ற விடயங்களைக் கையாள்வதற்கு ஏற்கனவே சட்ட பூர்வமான நிறுவனங்கள் இருக்கின்றன. ஜனநாயக நாட்டிலே அதனைக் கையாளுவதற்கான முறைகளும் இருக்கின்றன.

அப்படி இருக்கையில், அவற்றைப் புறமொதுக்கி – அவற்றுக்கு சமாந்தரமாக – இன்னொருசெயலணியை ஜனாதிபதி உருவாக்குவது – ஜனநாயக கட்ட மைப்பிலிருந்து விலகிச் சென்று ஓர் ஏகாதிபத்திய ஆட்சிமுறையை உருவாக் குவதற்குச் சமனாகும்.

உருவாக்கப்பட்ட இந்தச் செயலணியிலே 13 பேர். இராணுவம் உட்படப் பாதுகாப்புத் தரப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்.

இந்த நாட்டில் இராணுவமயமாக்கல் நடப்பதை நிரூபிப்பதற்கு வேறு ஒரு சாட்சியம் தேவையில்லை. அதை ஊர்ஜிதப்படுத்துகின்றது இந்தச் செயலணி உருவாக்கம்.

நாட்டின் ஆட்சியின் கொள்கையையும் திசையையும் தீர்மானிப்பது அமைச்சரவை என்றே அரசமைப்புக் கூறுகின்றது. இப்போதும் காபந்து அரசாங்க அமைச்சரவை ஒன்று இருக்கின்றது. அந்த அமைச்சரவையை மீறி, ஜனாதிபதி இப்படி ஒரு செயலணியை அமைத்தி ருப்பது அவர் நாடாளுமன்றத்துக்கும் பொறுப்புக்கூறாமல், அமைச்சரவைக்கும் பொறுப்புக்கூறாமல், முற்றும் முழுதாகத் தானாக மட்டும் செயற்படும் ஒரு போக் கைக் காண்பிக்கின்றது.

இந்தப் போக்கு நாட்டுக்கு, ஆட்சித் துறைக்கு , ஜனநாயகத்துக்கு பெரும் அபாயமாக அமைக்கின்றது.

கிழக்கில் தொல்லியில் துறைப் பாது காப்புக்கு என்ற பெயரில் உருவாக்கப்பட் டிருக்கின்ற விசேட ஜனாதிபதி செயலணி யில் இடம் பெறுகின்ற பதினொரு பேரும் சிங்களவர்கள். ஆனால் கிழக்கு மாகா ணத்தில் மிகப்பெரும்பான்மையாக வாழ்பவர்கள் தமிழ்ப் பேசும் மக்களே.

எனினும் ஒரு தமிழரோ, ஒரு முஸ் லிமோகூட இல்லாமல் இந்தச் செயலணி உருவாக்கப்பட்டிருக்கின்றது. அதிலும் இராணுவத்தைச் சேர்ந்தோரும், பௌத்த பிக்குமாரும் உள்ளடங்கியிருக்கின் றார்கள்.

ஆகவே நாட்டை சிங்கள மயமாக்கு தல், பௌத்த மயமாக்குதல், இராணுவப் பிடிக்குள் வைத்திருத்தல் என்ற நிகழ்ச்சி நிரல்களின் வெளிப்பாடாகவே இந்த விடயங்களை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்தப் போக்கை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்றார் அவர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.