சாரதி அனுமதிப்பத்திர செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினர் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து
கடந்த அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் முன்னெடுப்பதற்கான அனுமதி இரத்து செய்யப்பட்டுள்ளது.
குறித்த அனுமதியை இரத்து செய்யும் அமைச்சரவை தீர்மானத்திற்கு இன்று (வியாழக்கிழமை) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் துறையினரும் முன்னெடுப்பதற்கு கடந்த அரசாங்கத்தால் தீர்மானம் எடுக்கப்பட்டது.
இந்தத் தீர்மானத்தை இரத்து செய்து, செயன்முறைப் பரீட்சையை அரச துறையினர் மாத்திரம் மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு மோட்டார் போக்குவரத்து பரிசோதகர்கள் சங்கத்தினால் துறைசார் அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைக்கு அமைய, சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான செயன்முறைப் பரீட்சையை தனியார் பிரிவினரும் மேற்கொள்வதை இரத்து செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் பயணிகள் போக்குவரத்துத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அவற்றை இரத்து செய்யும் தீர்மானம் அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை