இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு: கிறிஸ் கெய்ல்!

இனவெறி கால்பந்து விளையாட்டில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு என மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரரான கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நிராயுதபாணியான கறுப்பின மனிதர் ஜோர்ஜ் ஃபிலாய்டின் மரணத்துக்கு நீதிக்கோரி உலகம் முழுவதும் நீதிக் குரல் ஒலித்து வருகின்றது.

இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில், “மற்றவர்களை போல கறுப்பு இன மக்களின் வாழ்க்கையும் முக்கியமானதுதான். அவர்களுக்கு என்று தனி வாழ்க்கை முறை கிடையாது. கறுப்பின மக்களை முட்டாள்கள் போல நடத்துவது நிறுத்தப்பட வேண்டும். நான் உலகம் முழுக்க சுற்றியுள்ளேன்.

நான் கறுப்பினத்தை சேர்ந்தவன் என்பதால், என் மீதும் இன வெறுப்பை மறைமுகமாகவும, நேரடியாகவும் வெளிப்படுத்தினார்கள். இனவெறி கால்பந்தில் மட்டுமல்ல கிரிக்கெட்டிலும் உண்டு. அணி வீரர்களுக்குள் கறுப்பு இனத்தவர் என்பதால், கடைசி வாய்ப்புதான் கிடைக்கும். கறுப்பு சக்திமிக்கது. கறுப்பு எனது பெருமை” என கூறினார்.

இதனிடையே இனவெறிக்கு எதிராக கிரிக்கெட் உலகத்தினர் குரல் கொடுக்க வேண்டும் என்று மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டேரன் சேமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.