உலகப் போரின்போது கூட இந்த நிலை ஏற்பட்டதில்லை – ராகுல் காந்தி

கொரோனாவால் இந்த அளவிற்கு உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள் என ராகுல் காந்தி தெரிவித்தார்.

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி குறித்து, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காணொலி வாயிலாக பஜாஜ் ஆட்டோ நிறுவன இயக்குனர் ராஜீவ் பஜாஜுடன் கலந்துரையாடினார்.

இதன்போது ராகுல் காந்தி பேசுகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக மீண்டும் கூறினார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இதுபோன்று உலகம் முடக்கப்படும் என்று யாரும் கற்பனையில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். உலகப் போரின்போது கூட, இந்த அளவுக்கு முடக்க நிலை ஏற்பட்டதில்லை. அப்போது கூட அனைத்தும் திறந்திருந்தன என்று நினைக்கிறேன். இது ஒரு மிகப்பெரிய பேரழிவு.

இந்தியாவில் ஊரடங்கு அமலுக்கு வந்தபிறகு நடக்கும் நிகழ்வுகளை பார்த்து தான், ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டது என கூறுகிறேன். உலகிலேயே ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்திய பிறகு நோய் அதிகரிப்பது இங்குதான். தற்போது மத்திய அரசு பின்வாங்கியுள்ளது. அத்துடன் பொறுப்பை மாநிலங்களுக்கு விட்டுவிடப்போகிறது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.