கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு!
இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்து 797 தொற்றாளர்கள் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளதாகச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த 42 கடற்படை வீரர்களும், இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப் பட்டிருந்த 03 பேரும், பங்களாதேஷிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 02 பேரும், டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவருமே நேற்றைய தினம் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 839 ஆக உயர்வடைந்துள்ளதாகச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 11 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை