நிசங்க சேனாதிபதி விடயத்தில் அரசாங்கத்துக்கு சவால் விடும் அர்ஜுன

அவன்கார்ட் தலைவர் நிசங்க சேனாதிபதி, எவ்வாறு அதிகளவு பணத்தை சம்பாதித்தார் என்பதை அரசாங்கம் கண்டுப்பிடிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சவால் விடுத்துள்ளார்.

அப்போதுதான் ஜனாதிபதி கூட நேரடியாக இவ்விடயத்தில் பேச முடியுமென  அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவன்கார்ட் வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அர்ஜுன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “காசு மோசடியில் ஈடுபட்ட ஒருவர். அரசாங்கத்திற்கு கிடைக்கின்ற பணத்தைதான் இந்த மனிதர், தனது பையினை நிரப்பியுள்ளார்.

நான் அவருக்கு ஒரு நல்ல அறிக்கை தருகிறேன். நான் சம்பவத்தை முழுமையாகப் படித்தேன். அவர் செய்துள்ள செயற்பாடுகள் அனைத்தும் எனக்கு தெரியும். அவர் எவ்வாறு பெற்றார் என்பதும் தெரியும்.

நான் சரியாக பேசினால். அவருக்கு இங்கு இருப்பதற்கு வாய்ப்பு இல்லாமல் போகும்.

நிஸங்க என்ற நபர், எவ்வாறு பணத்தை தேடினார் என்றும் அதற்மேல் அவர் வேறு என்ன வியாபாரம் செய்கின்றார் என்றும் தேடி பாருங்கள்

நாட்டின் இராணுவத்தில் சாதாரண பதவியில் இருந்த ஒருவருக்கு, இவ்வாறு அதிகளவு பணம் கிடைப்பதற்கு ஒன்று அரசாங்கத்தின் பணத்தை எடுத்திருக்க வேண்டும். இல்லாவிடின் வேறுவொரு வியாபாரத்தின் ஊடாக பணத்தை அதிகளவு தேடி இருக்க வேண்டும்.

இதனை தேடிபார்க்க வேண்டியது, புதிதாக  ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கமேயாகும். கோட்டாபய  நல்ல மனிதர் தானே, அப்படியாயின் முதலில் நிஸங்க சேனாதிபதி செய்துள்ள திருட்டு வேலை எவ்வளவு இருக்கின்றது என்பதை கணக்கிடவேண்டும். அவர் மொத்தமாக எவ்வளவு பணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் மதிப்பிட வேண்டும்.

இவ்வாறு செய்தால் ஜனாதிபதி கோட்டாபயவுக்கு நேரடியாக பேச முடியும். ஆனால் ஜனாதிபதி இதனை செய்வார் என்று நினைக்கவில்லை” என குறிப்பிட்டுள்ளார்

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.