தமிழகத்தின் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப் பெய்யும் – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவ காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைப்பெய்யக்கூடும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
அத்துடன் தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 – 50 கிமீ வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக இன்றும், நாளையும் தென் கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீசெல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய மேற்கு வங்கக் கடலின் கிழக்கு பகுதியில் எதிர்வரும் 8-ம் திகதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை