மொனராகலை துப்பாக்கி சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு

மொனராகலை-  இத்தேகட்டுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரே துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அதன்போது, அவர் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பரஸ்பரம் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நபர், மொனராகலை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  மேலும் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.