ஹார்லெஸ்டன் துப்பாக்கி சூடு: ஒருவர் கைது

வடமேற்கு லண்டனில் இரண்டு வயது குழந்தை உட்பட நான்கு பேர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குழந்தையின் தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள் அடங்கிய இந்த குழு, நேற்று முன் தினம் (புதன்கிழமை) மாலை ஹார்லெஸ்டனில் (Harlesden) உள்ள எனர்ஜென் க்ளோஸில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர்.

அப்போது, கண்மூடித்தனமான தாக்குதலின் பின்னர் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில், வடக்கு லண்டனில் இரண்டு முகவரிகளில் தேடுதல் நடவடிக்கையினை முன்னெடுத்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மெட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலை முயற்சி என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 19 வயது இளைஞன் தற்போது காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இரண்டு வயது குழந்தை தீவிரமான ஆனால் நிலையான நிலையில் உள்ளதாகவும், தாய் மற்றும் பதின்ம வயதுடைய இரண்டு ஆண்கள், உயிராபத்தற்ற நிலையில் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.