வழமைக்கு திரும்புகிறது ரயில் சேவைகள்

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழக்கமான கால அட்டவணையில் புகையிரத சேவைகள் இடம்பெறுமென ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கடந்த சில வாரங்களாக இயங்கி வந்த சிறப்பு அட்டவணை, இனிமேல் நடைமுறையில் இருக்காதெனவும் அந்நிலையம் தெரிவித்துள்ளது.

ஆனாலும் முற்பதிவு நடைமுறை தொடரும் என ரயில் திணைக்களம்  மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை நாடு முழுவதும் ஊரடங்கு சட்ட அமுலாக்கல் காலம் மேலும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (சனிக்கிழமை) முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.