மன்னாரில் 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்
மன்னார்–பேசாலை மற்றும் வங்காலைப்பாடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 57 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சட்ட விரோதமாக இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த நபர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர்களுக்கு நேரடியாக உதவி செய்த ஐந்து நபர்கள், பொலிஸார் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு புனானை தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், இவர்களுடன் தொடர்புடைய பேசாலை பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவைச் சேர்ந்த 12 குடும்பத்தைச் சேர்ந்த 52 நபர்கள், அவர்களே தற்போது அவர்களின் வீடுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பாக மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் இது கொரோனா வைரஸ் நோய் தொடர்பாக மேற்கொள்ளும் சாதாரண நடவடிக்கை என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை ஊடக இவர்கள் தொடர்ச்சியாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்டு அவதானிக்கப்படுவார்கள். இவ்வாறான செயற்பாடுகளின்போது, பொது மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை