தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாமென ரட்னஜீவன் கூறியதாக பீரிஸ் குற்றச்சாட்டு

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினரான பேராசியர் ரட்னஜீவன் ஹுல், வெளிப்படையாகவே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினருக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளாரென அக்கட்சியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக ஜி.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளதாவது, “மறைமுகமாகக் கூட இல்லாமல், மிகவும் தெளிவாக ரட்னஜீவன் ஹுல், தாமரை மொட்டுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில், நாம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பாக எவ்வாறு முழுமையான நம்பிக்கையைக் கொள்வது?

அவர்கள் ஒரு சார்பாகத்தான் செயற்படுகிறார்கள் என்பது ஊர்ஜிதமாகியுள்ளது. இந்த நிலையில், பொதுத் தேர்தல் நடுநிலையாக நடைபெறுமா எனும் பிரதான சந்தேகம் எழுந்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் என்ற வகையில், தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பாக துளியளவும் நம்பிக்கையில்லை என்று நான் இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனை விட, இதற்கு முன்னர் இருந்த நிலைமை சிறந்தது என்பதுதான் எமது நிலைப்பாடு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.