எங்கே செல்கிறது மனிதம்? – கர்ப்பிணி யானையை போல் கர்ப்பிணி பசுவுக்கு நடந்த கொடூரம்!
கர்ப்பிணி யானைக்கு வெடிமருந்து வழங்கப்பட்ட சம்பவத்தை போல் தற்போது கர்ப்பிணி பசுவொன்றுக்கு வழங்கப்பட்ட உணவிலும் வெடிமருந்து வைத்து கொடுக்கப்பட்ட கொடூர சம்பவம் இமாச்சலப் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கேரளாவின் பாலக்காடு பகுதியில் பசியால் சுற்றித் திரிந்த கர்ப்பிணி யானைக்கு சிலர் அன்னாசி பழத்துக்குள் வெடி மருந்துகளை வைத்து சாப்பிட கொடுத்து கொலை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த யானையின் மரணத்திற்கு இந்தியா முழுவதும் எதிர்ப்பு குரல்களும் கண்டனங்களும் வெளியாகின.
இந்நிலையில் தற்போது இமாசலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர் மாவட்டம் ஜன்துட்டா பகுதியில் கர்ப்பிணி பசுவுக்கு கோதுமை மாவு உருண்டைக்குள் வெடி வைத்து கொடுக்கப்பட்டுள்ளது. அதனை உட்கொண்ட பசுவின் வாய் சிதைந்து படுகாயமடைந்தது.
இதுதொடர்பான காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. விலங்குகளால் மக்களுக்கு அச்சநிலை தோன்றிய சூழல் மாற்றமடைந்து தற்போது மனிதர்களால் விலங்குகள் அச்சநிலையை எதிர்நோக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலாளர்கள் விசனம் வெளியிடுகின்றனர்.
கருத்துக்களேதுமில்லை