தலவாக்கலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி இருவர் பாதிப்பு
தலவாக்கலை- வட்டக்கொடை, யொக்ஸ்பொர்ட் தோட்டத்தில் இரு தோட்டத்தொழிலாளர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்காகி வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று ( திங்கட்கிழமை) காலை 8.30 மணியளவில், தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் செயற்பாட்டில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தப்போது, மரத்திலிருந்த குளவிக்கூடு திடீரென கலைந்து அவர்களை தாக்க முற்பட்டுள்ளது.
இதன்போது 2தொழிலாளர்கள் முற்றாக குளவி தாக்குதலுக்கு உட்பட்டு, வட்டக்கொடை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினமும், நுவரெலியா – டயகம தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் காயமடைந்த நிலையில் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆணொருவரும் 6 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை