ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தினசரி கொவிட்-19 உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தது!
கனடாவில் கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தினசரி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.
இதற்கமைய, கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில், 27பேர் உயிரிழந்ததோடு, 642பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதிக்கு (23பேர்) பிறகு, தற்போது தான் குறைந்த உயிரிழப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 95,699பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 7800பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 33,666பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 54,233பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுதவிர, 1,816பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருத்துக்களேதுமில்லை