குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்கும் பிரான்ஸ்!

குப்பைகளை வீதிகளில் எறிவதற்கான தண்டனைகளை கடுமையாக்க, பிரான்ஸ் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி முகக்கவசங்கள், சிகரட் அடிக்கட்டைகள் (mégots) போன்றவற்றை பொதுமக்கள் வீதியில் எறிவது, மற்றும் பொது இடங்களில் குப்பைப் பைகளை வைப்பது போன்ற குற்றங்களிற்கான தண்டனைகளை அதிகரிப்பதற்கான சட்ட மூலம் இந்த மாத நடுப்பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இவ்வாறான குற்றங்களிற்கு 135 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் என பிரான்ஸின் சுற்றுப்புறச்சூழல் மாற்றத்திற்கான அமைச்சிற்கான அரசாங்கச் செயலாளரான ப்ரூன் பொரிசோ (Brune Poirson) தெரிவித்துள்ளார்.

இதுவரை இவ்வாறான குற்றங்களிற்கு 68 யூரோக்கள் அபராதத் தொகையே விதிக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் நடைபாதை, கடற்கரை, கடலிற்குள் என எங்கும் ஒரு முறை பாவித்து விட்டு எறியும் முகக்கவசங்களை மக்கள் பொறுப்பற்ற முறையில் எறிகின்றனர். இவற்றைத் தடுப்பதற்காகவே இந்தச் சட்ட மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.