எல்லைப் பிரச்சினையை தீர்பதற்கு இராணுவ மற்றும் தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை!

இந்திய – சீனா எல்லைப் பிரச்னைக்கு சுமூகத் தீா்வு காண்பதற்காக தூதரக மற்றும் இராணுவ ரீதியில் பேச்சுவாா்த்தையை ஆரம்பிப்பதற்கு இருநாடுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன.

இது குறித்த  உயர்மட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்ற நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று (ஞாயிற்றுக்கிழைமை) அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், “இந்தியா,  சீனா இடையேயான நல்லுறவு மேலும் வளரவேண்டுமெனில் எல்லையில் அமைதியும்,  நல்லிணக்கமான சூழலும் நிலவ வேண்டும்.

இதற்காக  ஏற்கெனவே இரு நாட்டுத் தலைவா்கள் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில்  கிழக்கு லடாக் எல்லைப் பிரச்சினைக்கு விரைவில்  தீா்வு காண்பதற்கு இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனா்.

பேச்சுவாா்த்தையின்போது கிழக்கு லடாக்கில் கூடுதலாக குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று சீன இராணுவ குழுவினரிடம் இந்திய குழுவினா் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

இந்திய- சீன எல்லை முழுமையாக வரையறுக்கப்படாததால் லடாக்,  சிக்கிம், அருணாசல பிரதேசம்,  ஹிமாசல பிரதேசம்,  திபெத் ஆகிய பகுதிகளில் சீனா அவ்வப்போது படைகளைக் குவித்து,  ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு வருகிறது.

இந்தப் பிரச்சினைக்குத் தீா்வுகாண்பதற்காக  இந்திய,  சீன இராணுவத்தின் கமாண்டா் நிலையிலான அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை 12 முறை நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து இராணுவ மேஜா் நிலையிலான அதிகாரிகளின் பேச்சுவாா்த்தை 3 முறை நடைபெற்றது. பல சுற்று பேச்சுவாா்த்தைகளிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.  எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதையடுத்து  இந்திய,  சீன தூதரக அதிகாரிகள் நிலையிலான பேச்சுவாா்த்தை வெள்ளிக்கிழமையும்,  இரு நாட்டு இராணுவ துணைத் தலைமைத் தளபதி நிலையிலான பேச்சுவாா்த்தை சனிக்கிழமையும் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.