கூட்டு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தயார் – கட்சியின் உப தலைவர் கணபதி கணகராஜ் அதிரடி…
கூட்டு ஒப்பந்தத்துக்குப் பதிலாக சிறப்பான மாற்று ஒப்பந்தமொன்று வரும் பட்சத்தில் கூட்டு ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தயாராகவே இருக்கின்றது” என்று அக்கட்சியின் உப தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கூட்டு ஒப்பந்தம் என்பது கல்வெட்டு அல்ல. தொழிலாளர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் மாற்றுத்திட்டமொன்று வருமானால் கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி, அதனைக் கிழித்தெறிவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
எனினும், அரசியல் இலாபத்துக்காகவே தொழிலாளர் தேசிய சங்கம் கூட்டு ஒப்பந்தத்தை விமர்சித்து வருகின்றது. மாற்றுத் திட்டத்தை முன்வைப்பதற்குப் பதிலாக தொழிலாளர்களை வீதியில் இறக்கி அரசியல் நடத்துவதற்கு முயற்சிக்கின்றது. விமர்சிப்பதைவிடுத்து மாற்று திட்டத்தை முன்வைப்பதே சிறப்பாக இருக்கும்.
அதேவேளை, பொதுத்தேர்தல் முடிவடைந்த பின்னரே ஜனநாயக முறைப்படி இ.தொ.காவின் தலைமைப் பதவிக்கு நபரொருவர் தெரிவுசெய்யப்படுவார்” – என்றார்.
………………
கருத்துக்களேதுமில்லை