கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 49 பேர் பூரண குணம்
கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 49 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் தற்போது வரை கொரோனா தொற்றிலிருந்து 990 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளான 834 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 835 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இலங்கையில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை