35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கின்றனர் – ரவி

35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு தற்போது வந்தவர்கள் சவால் விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

சிறிகொத்தவில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் தொழிற்சங்கக் கூட்டம், பாரிய சர்ச்சைகளுக்கு நடுவே இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ரணில்- சஜித் தரப்பினரின் மோதல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, ரவி கருணாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர், “ஊடகங்களில் எவ்வாறான செய்திகள் வந்தாலும் நாட்டு மக்கள் உண்மையை அறிவார்கள்

டி.எஸ். சேனாநாயக்க, டட்லி. சேனாநாயக்க,ஜே.ஆர். ஜெயவர்த்தன வளர்த்தெடுத்தக் கட்சியை யார் அழிக்கப் பார்க்கிறார்கள் என்பது மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

இவ்வாறானவர்கள் தொடர்பாக நாம் கவலையடைகிறோம். இன்று நேற்று கட்சிக்கு வந்தவர்கள், 35 வருடங்களுக்கும் மேலாக கட்சியில் இருப்பவர்களுக்கு சவால் விடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளமையையிட்டு நாம் மிகவும் மனம் வருந்துகிறோம்” என மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.