கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 22 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 857 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 22 நோயாளிகளில் குவைத்தில் இருந்து நாடு திரும்பிய 8 பேரும் சென்னையில் இருந்து நாடு திரும்பிய நான்கு பேரும் கடற்படையைச் சேர்ந்த 10 பேரும் அடங்குகின்றனர்.
அதேநேரம், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 49 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து நேற்று வெளியேறியுள்ளனர்.
இதற்கமைய வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 990 ஆக அதிகரித்துள்ளதாக தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரம் இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்துக்களேதுமில்லை