வவுனியாவில் கைகலப்பு : தீக்காயங்களுடன் பெண்ணொருவர் சிகிச்சை : பெண் ஒருவர் கைது
வவுனியா – றம்பைவெட்டி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தீக்காயங்களுடன் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
நேற்று (திங்கட்கிழமை) குறித்த பெண்ணுக்கும் அயலவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாகவே இச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வவுனியா வைத்தியசாலை பொலிஸார் வழங்கிய தகவலுக்கமைய, மாமடு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் அதேபகுதியை சேர்ந்த பெண் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக மாமடு பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்துக்களேதுமில்லை