கிளிநொச்சியில் “நாட்டிற்காக நாம் ஒன்றாய்” தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம்
போரினால் பாதிக்கப்பட்ட பெண்கள் அமைப்பினால் “நாட்டிற்காக நாம் ஒன்றாய்” தேசிய விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
குறிதத் நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் பரந்தன் சந்தியில் இடம்பெற்றது. இதன்போது விழிப்புணர்வு ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டதுடன், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துண்டுபிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.
இதன்போது கரு்தது தெரிவித்த குறித்த அமைப்பின் உறுப்பினர் ஜெனி குறிப்பிடுகையில், “தற்போது நாட்டில் உள்ள சூழலில் அனைவரும் ஒன்றாக இணைந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக நாடு முழுவதும் இவ்ாறான நிகழ்ச்சி திட்டங்களை முன்னெடு்தது வருகின்றோம்.
அரசியலில் ஈடுபடும் பெண்களை ஊக்குவிக்கவும், பெண்களை முன்னோக்கி கொண்டு செல்லும் வகையில் பல்வேறு திட்டங்களை நாங்கள் முன்னெடுத்த வருகின்றோம்.
தற்போது நாட்டில் பல்வேறு நெருக்கடிகள் காணப்படுகின்றது. இவ்வாறான நிலையில் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டிய நிலைக்குள் த்ளப்பட்டுள்ளோம்” என அவர் தெரிவித்தார்.
கண்டியில் ஆரம்பித்த குறிதத் செயற்திட்டம் நேற்று யாழில் இடம்பெற்றதாகவும், இன்று கிளிநொச்சி மற்றம் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்த அவர்கள், இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை